/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில கிரிக்கெட் திருச்சி திரில் வெற்றி
/
மாநில கிரிக்கெட் திருச்சி திரில் வெற்றி
ADDED : மே 24, 2024 01:11 AM
கோவை:கோவையில் நடக்கும் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்றில் அரியலுார் அணியை ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திருச்சி அணி 'திரில்' வெற்றி பெற்றது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி பல்வேறு மாவட்டங்களில் நடக்கிறது. இதன் 'ஏ' பிரிவு லீக் போட்டிகள் கோவையில் நடக்கின்றன.
கோவை, கிருஷ்ணகிரி, திருச்சி, அரியலுார், திருவள்ளூர் ஆகிய அணிகள் விளையாடுகின்றன. நேற்று முன்தினம் நடந்த போட்டியில் திருச்சி மாவட்ட அணி, அரியலுார் மாவட்ட அணியை எதிர்த்து விளையாடியது.
மழை காரணமாக 50 ஓவர்கள் கொண்ட போட்டி 26 ஓவர்கள் போட்டியாக மாற்றப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி 25.3 ஓவர்களில் 123 ரன்கள் சேர்த்தது. அரியலுார் அணியின் அஜித் 3 விக்கெட் வீழ்த்தினார்.
அடுத்து விளையாடிய அரியலுார் அணியினர் 26 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்தனர். திருச்சி சார்பில் பரமசிவம் 3 விக்கெட் வீழ்த்தினார். இதனால், திருச்சி அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.