/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில பேரிடர் மீட்பு குழு மேட்டுப்பாளையம் வருகை
/
மாநில பேரிடர் மீட்பு குழு மேட்டுப்பாளையம் வருகை
ADDED : ஜூலை 31, 2024 02:29 AM

மேட்டுப்பாளையம்;பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து, மாநில பேரிடர் மீட்பு குழுவினர் மேட்டுப்பாளையம் வந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடிக் குண்டம் விழா நடைபெற்று வருகிறது. கோவிலின் அருகே பவானி ஆறு ஓடுகிறது. குண்டம் இறங்கும் பக்தர்கள், ஆற்றில் குளித்து நீராடிய பின், குண்டம் இறங்குவது வழக்கம்.
பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில், கனமழை பெய்து வருவதை அடுத்து, அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், பில்லூர் அணைக்கு அதிகபட்சமாக, 20,000 ஆயிரம் கண்ணாடி தண்ணீர் வந்துள்ளது.
ஏற்கனவே அணை நிரம்பியுள்ள நிலையில், அணைக்கு வருகின்ற தண்ணீர் முழுவதையும், அப்படியே பவானி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக் குண்டம் விழாவில், குண்டம் இறங்க வரும் பக்தர்கள், பவானி ஆற்றில் யாரும் குளிக்காமல் இருக்க, மாநில பேரிடர் மீட்பு குழுவினரும், மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினரும், கண்காணிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாம் என, பக்தர்களுக்கு அறிவிப்பு செய்துள்ளனர். மேலும் பேரிடம் மீட்பு குழுவினர், 18 பேர், இரவு பகலாக பவானி ஆற்றின் கரையோரம், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.