/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில கிக் பாக்ஸிங் கோவை பதக்க வேட்டை
/
மாநில கிக் பாக்ஸிங் கோவை பதக்க வேட்டை
ADDED : மே 09, 2024 04:36 AM

கோவை, : சென்னையில் நடந்த மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் கோவை வீரர்கள் 44 பதக்கங்கள் வென்றனர்.
தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக்பாக்ஸிங் சங்கம் சார்பில் தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக்பாக்ஸிங் சாம்பியன்ஷிப் 2024க்கான போட்டிகள் சென்னையில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வித்துறை பல்கலையில் நடந்தது.
இப்போட்டியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையினர் போட்டியிட்டனர். இப்போட்டியில் கோவை அணி சார்பில் ஆண்டலி கிக் பாக்ஸிங் அகாடமி, பிரேம் எம்.எம்.ஏ., அகாடமி, ராஜா எம்.எம்.ஏ., அகாடமி மற்றும் சான் அகாடமியை சேர்ந்த 51 வீரர் - வீராங்கனையினர் பங்கேற்றனர்.
தங்களின் முழுத்திறமையையும் வெளிப்படுத்திய கோவை வீரர்கள் 13 தங்கம், 15 வெள்ளி, 16 வெண்கலம் என 44 பதக்கங்கள் வென்றனர். மேலும், தங்கப்பதக்கம் வென்ற 13 வீரர் வீராங்கனையினர் புனேவில் நடக்கவுள்ள தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.
வெற்றி பெற்றவர்களை கோவை மாவட்ட அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்க நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் பாராட்டினர்.