/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில அளவிலான பில்லியர்ட்ஸ் போட்டி
/
மாநில அளவிலான பில்லியர்ட்ஸ் போட்டி
ADDED : ஆக 18, 2024 10:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;பில்லியர்ட்ஸ் டிரீம் சார்பில், 40வது தமிழ்நாடு மாநில அளவிலான ஆண்கள் தரவரிசை பில்லியர்ட்ஸ் போட்டி, சாய்பாபா காலனியில் உள்ள பி.டி.ஏ., அகாடமியில் நடந்து வருகிறது.
இதில் சென்னையை தவிர்த்து, மாநிலம் முழுவதிலும் இருந்து, 65 பேர் கலந்து கொண்டனர். இவர்களில், 16 பேர் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.
கோவையில் நடைபெறும் பில்லியர்ட்ஸ் போட்டி போன்று, சென்னையில் நடத்தப்பட்டு வரும் போட்டியில், சென்னையை சேர்ந்த 16 பேர் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.
இந்த 32 பேருக்கும் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறும் 8 பேர் தேசிய அளவிலான போட்டியில் விளையாட உள்ளனர்.

