ADDED : ஜூன் 22, 2024 05:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை:
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளத்தில், தமிழக களரி பயட்டு அசோசியேஷன் சார்பில், 7வது மாநில அளவிலான களரி சாம்பியன் ஷிப், போட்டிகள் நேற்று நடந்தது.
மாநில களரி பயட்டு செயலாளர் வீரமணி, தலைவர் தேவராஜ், தேசிய களரி பயட்டு செயலாளர் பூந்துறைசோமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், சிவகங்கை, கன்னியாகுமரி, நாகர்கோவில், திருப்பூர், கோவை, சென்னை, விழுப்புரம், தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட களரி பயட்டு பயிற்சி மாணவர்கள் பங்கேற்றனர்.
சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.