/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில அளவிலான வாலிபால் போட்டி இந்தியன் வங்கி, ஐ.ஓ.பி., அணி வெற்றி
/
மாநில அளவிலான வாலிபால் போட்டி இந்தியன் வங்கி, ஐ.ஓ.பி., அணி வெற்றி
மாநில அளவிலான வாலிபால் போட்டி இந்தியன் வங்கி, ஐ.ஓ.பி., அணி வெற்றி
மாநில அளவிலான வாலிபால் போட்டி இந்தியன் வங்கி, ஐ.ஓ.பி., அணி வெற்றி
ADDED : மே 24, 2024 01:12 AM

பெ.நா.பாளையம்;பெ.நா.பாளையத்தில் டெக்ஸ்மோ கோப்பைக்கான மாநில அளவிலான வாலிபால் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், ஐ.ஓ.பி., இந்தியன் வங்கி அணிகள் வெற்றி பெற்றன.
துடியலுாரில் உள்ள அக்வா குரூப் நிறுவனத்தின் சார்பில் ராமசாமி நினைவு டெக்ஸ்மோ கோப்பை, 53வது ஆண்டு மாநில அளவிலான வாலிபால் போட்டி மற்றும் அக்வா டெக்ஸ் கோப்பை, 23ம் ஆண்டு மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி நடந்து வருகின்றன.
பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் இரவு நடந்த முதல் நாள் போட்டியில், ஐ.ஓ.பி., அணி, தமிழ்நாடு போலீஸ் அணியை, 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில், இந்தியன் வங்கி அணி, கஸ்டம்ஸ் அணியை, 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.
இன்று மாலை நடக்கும் மாநில அளவிலான போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தியன் வங்கி அணியுடன் அக்வா ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும், இரண்டாவது ஆட்டத்தில், தமிழ்நாடு போலீஸ் அணியுடன் கஸ்டம்ஸ் அணியும் மோதுகின்றன.