/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில பனிச்சறுக்கு விளையாட்டு :கோவை மாணவர்கள் பதக்கம்
/
மாநில பனிச்சறுக்கு விளையாட்டு :கோவை மாணவர்கள் பதக்கம்
மாநில பனிச்சறுக்கு விளையாட்டு :கோவை மாணவர்கள் பதக்கம்
மாநில பனிச்சறுக்கு விளையாட்டு :கோவை மாணவர்கள் பதக்கம்
ADDED : மே 29, 2024 12:43 AM

கோவை;மாநில அளவிலான பனிச்சறுக்கு விளையாட்டு போட்டியில், கோவை மாணவர்கள் இருவர் பதக்கம் வென்றனர்.
தமிழ்நாடு மாநில பனிச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டிகள், டில்லியில் நேற்று நடந்தன. இதில் பல்வேறு வயது பிரிவுகளில் அடிப்படையில், போட்டிகள் நடத்தப்பட்டன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 75க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதில், கோவை சார்பில் பங்கேற்ற, நேஷனல் மாடல் பள்ளி மாணவர் சர்வேஷ் 15 - 17 வயதுக்கு உட்பட்டோருக்கான 500மீ., போட்டி தங்கம் மற்றும் 300மீ., போட்டியில் வெள்ளி என இரண்டு பதக்கங்கள் வென்றார்.
இதேபோல் 10 வயதுக்கு உட்பட்டோருக்கான 300மீ., மற்றும் 500மீ., போட்டிகளில் யுவ பாரதி பள்ளியில் யு.கே.ஜி., படிக்கும் அனிவ் ஆதித்யா விக்ரம், தலா ஒரு தங்கம் வென்று அசத்தினார்.
பதக்கம் வென்ற இருவரும், தேசிய அளவிலான பனிச்சறுக்கு போட்டிக்கு தேர்வாகினர்.
வெற்றி பெற்ற மாணவர்களை, தமிழ்நாடு பனிச்சறுக்கு சங்க பொது செயலாளர் அருண் பிரசாத் வாழ்த்தினார்.