/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புள்ளியியலும் எளிது, கணினி அறிவியலும் எளிது; பிளஸ் 2 மாணவர்கள் மகிழ்ச்சி

ADDED : மார் 14, 2025 11:06 PM

கோவில்பாளையம்,; 'கணினி அறிவியல் மற்றும் புள்ளியியல் பாட தேர்வு எளிதாக இருந்தது,' என பிளஸ் 2 மாணவர்கள் தெரிவித்தனர்.
பிளஸ் 2 தேர்வு புள்ளியியல், கணினி அறிவியல், கணினி பயன்பாடு உள்ளிட்ட பாடங்களுக்கு நேற்று நடந்தது.
புள்ளியியல் தேர்வு எளிது
ஆகாஷ், காட்டம்பட்டி:
புள்ளியல் தேர்வு மிக எளிதாக இருந்தது. அதிக மதிப்பெண் பெற முடியும். மாதிரி கேள்வி தாளில் இருந்து பல கேள்விகள் வந்திருந்தன.
தேர்ச்சி பெறுவது எளிது
ஆராதனா, காட்டம்பட்டி:
புள்ளியியல் தேர்வில் குறைந்த மதிப்பெண் கேள்விகள், அதிக மதிப்பெண் கேள்விகள் என அனைத்தும் எளிதாக இருந்தது. தேர்ச்சி பெறுவது எளிது.
கணினி அறிவியல் தேர்வு எளிது
அபிஷேக், கோவில்பாளையம்:
கணினி அறிவியல் கேள்விதாள் மிக எளிது. தரப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே எழுதி விட்டேன். உறுதியாக அதிக மதிப்பெண் பெற முடியும்.