/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
3 நாட்கள் உஷா ரா இருங்க! எஸ்.எம்.எஸ்.,ல் எச்சரிக்கை
/
3 நாட்கள் உஷா ரா இருங்க! எஸ்.எம்.எஸ்.,ல் எச்சரிக்கை
3 நாட்கள் உஷா ரா இருங்க! எஸ்.எம்.எஸ்.,ல் எச்சரிக்கை
3 நாட்கள் உஷா ரா இருங்க! எஸ்.எம்.எஸ்.,ல் எச்சரிக்கை
ADDED : மே 20, 2024 11:07 PM
பொள்ளாச்சி;கோவையில் கோடை மழை பெய்யும் நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலையோரப் பகுதிகளில்பொதுமக்கள், சுற்றுலா பயணியர் பாதுகாப்பாக இருக்கும்படி, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவை மாவட்டத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு கோடை மழை மிக அதிக அளவில் பதிவாகி வருகிறது. கடந்த 10 நாட்களாகவே அவ்வப்போது மழை பெய்து வந்தாலும், கடந்த இரு நாட்களாக மழையின் தீவிரம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி , மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், பொதுமக்களுக்கு எஸ்.எம்.எஸ்., வாயிலாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதில், 'கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சுற்றுலாத் தலங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும். எனவே, பொதுமக்கள், சுற்றுலாப் பயணியர்பாதுகாப்பாக இருக்கவும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

