/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்.டி.சி., நிறுவனர்கள் நினைவு மாநில அளவில் பூப்பந்து போட்டி
/
எஸ்.டி.சி., நிறுவனர்கள் நினைவு மாநில அளவில் பூப்பந்து போட்டி
எஸ்.டி.சி., நிறுவனர்கள் நினைவு மாநில அளவில் பூப்பந்து போட்டி
எஸ்.டி.சி., நிறுவனர்கள் நினைவு மாநில அளவில் பூப்பந்து போட்டி
ADDED : ஆக 17, 2024 12:28 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லுாரியில், பள்ளிகள் இடையே மாநில அளவிலான பூப்பந்து போட்டி நடத்தப்பட்ட நிலையில், திருவாடுதுறை ஆதீனம் மேல்நிலைப் பள்ளி அணி முதலிடம் பிடித்தது.
பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லுாரியின் விளையாட்டுத் துறை சார்பில், மாநில அளவில் பள்ளிகள் இடையிலான, எஸ்.டி.சி., நிறுவனர்கள் நினைவு பூப்பந்து போட்டி நடத்தப்பட்டது. இரு தினங்கள் நடத்தப்பட்ட போட்டியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 8 பள்ளி அணிகள் பங்கேற்றன. லீக் சுற்று முறையிலான போட்டியை, கல்லுாரிச் செயலாளர் விஜயமோகன், துவக்கி வைத்தார்.
முடிவில், தஞ்சாவூர் திருவாடுதுறை ஆதீனம் மேல்நிலைப் பள்ளி அணி, முதலிடம் பிடித்து, சாம்பியன் பட்டம் வென்றது. இதேபோல,திண்டுக்கல் சிலுக்குவார்பட்டி விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி அணி இரண்டாமிடம், அரியலுார் பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளி அணி மூன்றாமிடம், திருச்சி ஸ்ரீரங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அணி நான்காமிடம் பிடித்தது.
தொடர்ந்து, நடந்த பரிசளிப்பு விழாவில், கல்லுாரித் தலைவர் சேதுபதி தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் வனிதாமணி முன்னிலை வகித்தார். வாலிபால் முன்னாள் தேசிய விளையாட்டு வீரர் நரேந்திரன் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை, கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் பாரதி, பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

