/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் கண்டறிந்து கல்லுாரியில் சேர்க்க நடவடிக்கை
/
உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் கண்டறிந்து கல்லுாரியில் சேர்க்க நடவடிக்கை
உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் கண்டறிந்து கல்லுாரியில் சேர்க்க நடவடிக்கை
உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் கண்டறிந்து கல்லுாரியில் சேர்க்க நடவடிக்கை
ADDED : செப் 13, 2024 10:29 PM
பொள்ளாச்சி : பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களே படிப்பை பாதியில் நிறுத்துவதாகவும், அவர்களைக் கண்டறிந்து கல்லுாரியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பிளஸ் 2 முடித்து கல்லுாரிக்கு விண்ணப்பிக்காத அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களை அடையாளம் கண்டு, 'உயர்வுக்குப் படி' முகாம் வாயிலாக, உயர்கல்வி வாய்ப்பை தமிழக அரசு வழங்கி வருகிறது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 2022---23, 2023--24ம் கல்வியாண்டில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 (இடைநின்ற) மற்றும் பிளஸ்2 தேர்ச்சி பெற்ற மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களை கல்லுாரியில் சேர்க்க அரசு பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களே படிப்பை பாதியில் நிறுத்துவதாகவும், அவர்களைக் கண்டறிந்து கல்லுாரியில் சேர்த்தாலும், தொடர்ந்து கல்வி கற்க இயலாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது: 'உயர்வுக்கு படி' திட்டத்தின் கீழ், 10ம் வகுப்பு தேறிய மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களை பிளஸ் 1, ஐ.டி.ஐ., அல்லது பாலிடெக்னிக் கல்லுாரி; பிளஸ் 1 இடைநின்ற மாணவர்களாக இருந்தால், பாலிடெக்னிக் அல்லது ஐ.டி.ஐ.,; பிளஸ் 2 முடித்த மாணவர்களை, கல்லுாரியில் சேர்க்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கல்லுாரியில் இடம் கிடைக்காமை, பொருளாதார பாதிப்பு காரணமாகவே மாணவர்கள் சிலர், கல்லுாரி படிப்பை தொடராமல் உள்ளனர். கல்விக் கடன் வழங்கினாலும், கல்லுாரிகளுக்கு ஏற்றாற்போல் அரசால் நிர்ணயிக்கப்பட்ட சேர்க்கை கட்டணத்தை மட்டுமே வங்கிகள் விடுவிக்கும்.
அதனால், நுாலகம், தேர்வு, விடுதி உள்ளிட்ட 'பில்' இல்லாத மறைமுக கட்டணத்தை மாணவர்களால் செலுத்த முடியாது.
அரசு கலைக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, இரு 'ஷிப்ட்' பாடம் நடத்த வேண்டும். அப்போது மட்டுமே மாணவர்கள், பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தாமல் உயர்கல்வி பயில்வர். இவ்வாறு, கூறினர்.