/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில்வே ஸ்டேஷனில் தபால் 'புக்கிங்' 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை
/
ரயில்வே ஸ்டேஷனில் தபால் 'புக்கிங்' 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை
ரயில்வே ஸ்டேஷனில் தபால் 'புக்கிங்' 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை
ரயில்வே ஸ்டேஷனில் தபால் 'புக்கிங்' 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை
ADDED : பிப் 27, 2025 12:09 AM
கோவைL ; கோவை ரயில் நிலைய வளாகத்தில் செயல்படும் தபால் 'புக்கிங்' கவுன்டர், 24 மணி நேரமும் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவை ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில், கோவை அஞ்சல் பிரிப்பகம், பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. போதிய இடவசதி இல்லாதது மற்றும் மெயில் மோட்டார் சர்வீஸ் (எம்.எம்.எஸ்.,) வாகனங்கள் நிறுத்துவதில் சிரமம் உட்பட பல்வேறு காரணங்களால், இங்கு செயல்பட்டு வந்த கோவை அஞ்சல் பிரிப்பகம், கவுண்டம்பாளையம், தேமையன் வீதியில் உள்ள, தபால் துறைக்கு சொந்தமான கட்டடத்துக்கு மாற்றப்பட்டு, ஒருங்கிணைந்த அஞ்சல் மையமாக செயல்பட்டு வருகிறது.
இருப்பினும், ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் உள்ள கட்டடத்தில், தபால் புக்கிங் கவுன்டர், 24 மணி நேரமும் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆர்.எம்.எஸ்., கோவை கோட்ட கண்காணிப்பாளர் ஜெயராஜ் பாபு கூறியதாவது: கோவை ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் செயல்பட்டு வரும் கட்டடத்தில், பதிவுத் தபால் மற்றும் விரைவுத் தபால் 'புக்கிங்' அதிகரித்து வருவதால், மேற்கு மண்டல போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் அறிவுறுத்தலின் பேரில், 24 மணி நேரமும் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆதார் சேவை, காலை 9:00 மணி முதல், இரவு 9:00 மணி வரை வழங்கப்படுகிறது.
கவுண்டம்பாளையம் தேமையன் வீதியில் உள்ள ஒருங்கிணைந்த அஞ்சல் மையத்தில், 24 மணி நேர புக்கிங் கவுன்டர், 'பார்சல்' சேவை, காலை 9:00 முதல் இரவு 9:00 மணி வரை ஆதார் சேவை ஆகியவையும் வழங்கப்படுகின்றன. பொதுமக்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

