/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருட்டு போன ஆட்டோ சென்னையில் மீட்பு
/
திருட்டு போன ஆட்டோ சென்னையில் மீட்பு
ADDED : ஆக 27, 2024 12:43 AM
போத்தனூர்:கோவை, தாமரைக்குளம், வீரப்பா நகரை சேர்ந்தவர் விஜய், 26. சொந்தமாக மினி சரக்கு வாகனத்தை வாடகைக்கு ஓட்டி வருகிறார். தினமும் இரவு வாகனத்தை ஈச்சனாரியிலுள்ள வாகன வாட்டர் சர்வீஸ் கடையில், நிறுத்திச் செல்வார்.
அதுபோல் கடந்த, 5ம் தேதி வாகனத்தை நிறுத்தியவர், 23ம் தேதி வந்து பார்த்தபோது, வாகனத்தை காணவில்லை. மதுக்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணையில், வாகனம் சென்னையில் இருப்பது தெரிந்தது.
எஸ்.ஐ.. பாண்டியராஜ் தலைமையிலான தனிப்படையினர், சென்னை சென்றனர். கூடுவாஞ்சேரி அருகே வாகனத்தை மீட்டனர். இதன் மதிப்பு 1.5 லட்சம் ரூபாயாகும்.
திருடிச் சென்ற செங்கல்பட்டு, அண்ணா நகரை சேர்ந்த டிரைவர் ரமேஷ், 46 என்பவரை கைது செய்தனர். கோவை அழைத்து வரப்பட்ட ரமேஷிடம், விசாரணை நடக்கிறது.