/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தெக்கலுாரில் நிறுத்தி செல்லுங்கள்: அரசு பஸ் டிரைவர்களுக்கு உத்தரவு
/
தெக்கலுாரில் நிறுத்தி செல்லுங்கள்: அரசு பஸ் டிரைவர்களுக்கு உத்தரவு
தெக்கலுாரில் நிறுத்தி செல்லுங்கள்: அரசு பஸ் டிரைவர்களுக்கு உத்தரவு
தெக்கலுாரில் நிறுத்தி செல்லுங்கள்: அரசு பஸ் டிரைவர்களுக்கு உத்தரவு
ADDED : மே 30, 2024 04:57 AM
கோவை : கோவை கோட்ட அரசு போக்குவரத்து கழக பஸ்கள், தெக்கலுார் நிறுத்தத்தில் நின்று, பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவையில் இருந்து ஈரோடு செல்லும் அரசு பஸ்கள், தெக்கலுார் செல்லாமல், பைபாஸில் பறந்து விடுகின்றன. திருப்பூர் செல்லும் பஸ்களில் பெரும்பாலானவை தெக்கலுார் செல்வதில்லை; குறிப்பிட்ட சில பஸ்கள் மட்டுமே தெக்கலுார் சென்று வருகின்றன.
சில தருணங்களில் தெக்கலுார் ஸ்டாப்புக்கு செல்லாமல், பைபாஸில் இறக்கி விடுவது வாடிக்கை. தெக்கலுார் செல்ல முடியாமல் பயணிகள் பஸ் ஸ்டாண்டில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்படுகிறது. இதேபோல், ஈரோட்டில் இருந்து கோவை நோக்கி வரும் அரசு பஸ்களும் தெக்கலுார் செல்வதில்லை. இதுதொடர்பாக அரசு போக்குவரத்து கழக உயரதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. இதைத்தொடர்ந்து, கோவை கோட்ட அரசு போக்குவரத்து கழக பஸ்கள், தெக்கலுார் நிறுத்தத்துக்கு சென்று, பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும் என கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
அனைத்து டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கும், இந்த அறிவுறுத்தல் தெரிய வேண்டும் என்பதற்காக, காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் உள்ள, டைம் கீப்பர் அலுவலகத்தில் கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்கள் கையெழுத்திடும் பதிவேட்டில், அறிவிப்பு எழுதப்பட்டுள்ளது.