sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பவானி ஆற்றின் குறுக்கே மண் தடுப்பணை கட்டி குடிநீருக்கு சண்டை:அகற்றக் கோரி ஊராட்சி தலைவர்கள் போராட்டம்

/

பவானி ஆற்றின் குறுக்கே மண் தடுப்பணை கட்டி குடிநீருக்கு சண்டை:அகற்றக் கோரி ஊராட்சி தலைவர்கள் போராட்டம்

பவானி ஆற்றின் குறுக்கே மண் தடுப்பணை கட்டி குடிநீருக்கு சண்டை:அகற்றக் கோரி ஊராட்சி தலைவர்கள் போராட்டம்

பவானி ஆற்றின் குறுக்கே மண் தடுப்பணை கட்டி குடிநீருக்கு சண்டை:அகற்றக் கோரி ஊராட்சி தலைவர்கள் போராட்டம்


ADDED : மார் 26, 2024 11:21 PM

Google News

ADDED : மார் 26, 2024 11:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்: பவானி ஆற்றில் உள்ளாட்சி அமைப்புகள் தன்னிச்சையாக மண் தடுப்பணை கட்டி குடிநீர் எடுக்க முயற்சிக்கப்பட்டது. இதை கண்டித்து ஊராட்சி தலைவர்கள் போராட்டம் செய்தனர். இதையடுத்து மண் தடுப்பணையை அகற்ற, நடவடிக்கை எடுத்ததை அடுத்து, ஊராட்சித் தலைவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து, வனபத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து, சிறுமுகை மூளையூர் வரை, 19 குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது. முதலில் கோவை மாநகராட்சி, இரண்டாவது திருப்பூர் மாநகராட்சி, மூன்றாவது மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு குடிநீர் திட்டத்துக்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது.

மண் தடுப்பணை


மேட்டுப்பாளையம் நகரில் இருந்து சிறுமுகை வரை மற்ற குடிநீர் திட்டங்களுக்கு, ஆற்றின் ஓரத்தில் ஆங்காங்கே கிணறுகள் அமைத்து, அதில் இருந்து தண்ணீரை உறிஞ்சி, சுத்தம் செய்து பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால், குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் பம்பிங் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சி குடிநீர் திட்டத்திற்கு தேவையான தண்ணீர் எடுக்க, பொதுப்பணித்துறை சார்பில், பவானி ஆற்றின் குறுக்கே, கான்கிரீட் தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெறுகின்றன. ஆற்றில் நீர் வரத்து குறைந்ததால், கான்கிரீட் தடுப்பணை முன்பாக, அதிகாரிகள் வாய்மொழியாக கூறியதை அடுத்து, பொக்லைன் இயந்திரம் வாயிலாக மண் தடுப்பணை கட்டியுள்ளனர். குடிநீர் எடுப்பதற்காக மற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தெரியாமல் மண் தடுப்பணை கட்டியதாக தெரிகிறது.

போராட்டம்


இதை அறிந்த பெள்ளேபாளையம் சிவக்குமார், சின்னக்கள்ளிப்பட்டி ரங்கசாமி, இலுப்பநத்தம் ரங்கசாமி, இரும்பறை ராஜேஸ்வரி ஆகிய நான்கு ஊராட்சி தலைவர்கள், திருப்பூர் மாநகராட்சி குடிநீர் திட்ட நீரேற்று நிலையம் முன் அமர்ந்து, போராட்டம் செய்தனர். அப்போது சம்பவ இடத்திற்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் மீரா, உதவி நிர்வாக பொறியாளர் சித்ரா, காரமடை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா, மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட, ஊராட்சி தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஊராட்சி தலைவர்கள், எங்கள் பகுதியில் குடிநீர் பம்பிங் செய்து, நான்கு நாட்கள் ஆகிறது. ஆற்றில் வருகின்ற தண்ணீரை, மண் தடுப்பணை கட்டியதால், ஆற்றில் தண்ணீர் வரவில்லை. இந்த மண் தடுப்பை அகற்ற வேண்டும் என கூறினர்.

உடனடியாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், ஆற்றின் குறுக்கே கட்டி இருந்த மண் தடுப்பணையை அகற்றும் படி கூறினர். அதை அடுத்து பொக்லைன் இயந்திரம் வாயிலாக, மண் தடுப்பணை அகற்றப்பட்டது. இதை அடுத்து ஊராட்சித் தலைவர்கள், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

ஊராட்சித்தலைவர்கள்

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில், திருப்பூர் மாநகராட்சி குடிநீர் திட்டத்துக்கு தண்ணீர் எடுக்க, மண் தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. இதை பார்த்த ஊராட்சித் தலைவர்கள், அதிர்ச்சி அடைந்தனர். இவ்வளவு பெரிய மண் தடுப்பணை கட்டியதால் தான், ஆற்றில் நீர் வரத்து முற்றிலும் குறைந்துள்ளது. அனைத்து மக்களுக்கும் குடிநீர் சீராக கிடைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஊராட்சி தலைவர்கள் கூறினர்.








      Dinamalar
      Follow us