ADDED : ஜூலை 24, 2026 06:52 PM
கோவை, ஜூலை 25–
பள்ளிக்கல்வி துறை சார்பில் அ–குறுமைய டேக்வாண்டோ போட்டி காந்திபார்க் அருகே மாரண்ண கவுடர் பள்ளியில் நேற்று துவங்கியது. 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவியர் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் போட்டிகளை துவக்கிவைத்தார்.
இதில், 22–24 கிலோ எடை பிரிவில் ஆர்.எஸ்., புரம் மேற்கு மாநகராட்சி பள்ளி மாணவி மோகிதா, ஒப்பணக்கார வீதி மாநகராட்சி பள்ளி ஆண்ட்ரியா, சி.சி.எம்.ஏ., அரசு பள்ளி ராஜ வைஷ்ணவி ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
அதேபோல், 24–26 கிலோ எடை பிரிவில் எஸ்.ஆர்.பி., அம்மணியம்மாள் பள்ளி ஸ்ரீ யக் ஷினி, ஆர்.எஸ்., புரம் மேற்கு மாநகராட்சி பள்ளி கவி பாரதி, ஒக்கிலிபாளையம் மாநகராட்சி பள்ளி காவியா, சி.சி.எம்.ஏ., பள்ளி தட்சன்யா ஆகியோர் முதல் நான்கு இடங்களை பிடித்தனர். இன்று மாணவர்களுக்கான போட்டிகள் நடக்கின்றன.
