/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு கலைக் கல்லுாரியில் மாணவர்கள் விழிப்புணர்வு
/
அரசு கலைக் கல்லுாரியில் மாணவர்கள் விழிப்புணர்வு
ADDED : பிப் 27, 2025 09:16 PM
கோவை; அரசு கலைக் கல்லுாரியில் நடந்த 'ஜியோ காஸ்டில்-25' போட்டியில் மாணவர்களின் விவாதமானது விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருந்தது.
கோவை அரசு கலை அறிவியல் கல்லுாரியின் புவி அமைப்பியல் துறை சார்பில் கல்லுாரிகளுக்கு இடையே 'ஜியோ காஸ்டில்-25' போட்டிகள் நேற்று நடந்தது. புவி அமைப்பியல் துறை மாணவர்களின் திறன், அறிவாற்றல், அனுபவங்களை வளர்க்கும் விதமாக விவாதம், ஓவியம், வினாடி-வினா, புவியியல் தேடல் உட்பட ஆறு போட்டிகள் நடத்தப்பட்டன.
கல்லுாரி முதல்வர் எழிலி முன்னிலையில் நடந்த போட்டிகளில், பருவ நிலை மாற்றம், புவி வெப்பமயமாதலும் அதன் பாதிப்புகளும் உள்ளிட்ட தலைப்புகளில் நடந்த மாணவர்களின் விவாதம் நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் இருந்தது.
மேலும், போட்டிகளில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு புவி சார்ந்த தகவல்களும் பரிமாறப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டன. போலீஸ் உதவி கமிஷனர் முருகேசன், கோவை நீர் வளத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.