ADDED : மே 02, 2024 11:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்:கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையின், தோட்டக்கலை மாணவியர், 11 பேர் ஊரக தோட்டக்கலை பணி அனுபவ திட்டத்தில், அன்னுார் பகுதியில் தங்கி உள்ளனர்.
நேற்று முன்தினம் ஒட்டர்பாளையத்தில், மரக்கன்று நடும் பணியில் ஈடுபட்டனர். வேம்பு, பூவரசு, உள்பட ஏழு வகைகளை சேர்ந்த மரக்கன்றுகளை நட்டனர்.
அப்பகுதி பொதுமக்கள், சிறுவர் சிறுமியரையும் இதில் ஈடுபடுத்தினர். பின்னர் மரம் நடுவது தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடத்தினர். விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கைகளில் ஏந்தி, ஊரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்.