ADDED : ஏப் 24, 2024 10:32 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணைக்கட்டு பகுதியில் குளித்த, கோவை சட்டக்கல்லுாரி மாணவர் நீரில் மூழ்கி இறந்தார்.
பொள்ளாச்சி, ஆழியாறு அருகேயுள்ள பள்ளி வளங்கால் அணைக்கட்டு பகுதிக்குச் செல்ல சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அங்கு, போலீசார் மற்றும் பொதுப்பணித் துறை சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று மதியம், கோவை சட்டக் கல்லுாரியில், மூன்றாம் ஆண்டு பயிலும் ஈரோட்டைச் சேர்ந்த கபிநாத், 21, தனது நண்பர்களுடன் அணைக்கட்டு பகுதிக்கு சென்றுள்ளார்.
தண்ணீரில் இறங்கி குளிக்க செய்துள்ளார். அப்போது, ஆழமான பகுதியில் தண்ணீரில் மூழ்கினார்.
ஆழியார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில், விரைந்து சென்றனர்.
நீரில் மூழ்கி இறந்த நிலையில், சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக, கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

