/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர் தலைவர்கள் பதவியேற்பு விழா
/
மாணவர் தலைவர்கள் பதவியேற்பு விழா
ADDED : ஆக 08, 2024 11:01 PM

கோவை:நேரு சர்வதேச பள்ளியின்மாணவர் தலைவர்கள் பதவியேற்பு விழா, நேரு தொழில்நுட்பக் கல்லுாரி அரங்கில் நடந்தது. பள்ளி தாளாளர் சைதன்யா,விழாவுக்கு தலைமை வகித்தார்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவை முன்னிட்டு நடந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கல்லுாரி முதல்வர் சிவபிரகாஷ் கலந்துகொண்டார்.
அவர் பேசுகையில், ''அப்துல்கலாம் போன்ற தலைவர்கள் தங்கள் வாழ்வில் பின்பற்றிய வழி,அனைவருக்குசிறந்த வழிகாட்டி. தலைவர்களை நினைவுபடுத்திக் கொள்வதோடு, அவர்களது வழியில் செல்லவும் மாணவர்கள் உறுதி ஏற்றுக் கொள்ள வேண்டும்,'' என்றார்.
விழாவில், புதியதாக தேர்வான மாணவர் தலைவர்கள் கவுரவிக்கப்பட்டனர். விளையாட்டு போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதுகள், பரிசுகள் வழங்கப்பட்டன.