ADDED : மே 02, 2026 08:14 PM
கோவை: கேரள மாநிலம் எர்ணாகுளம், காருகடத்தை சேர்ந்தவர் தேவிகா, 23. பி.எஸ்.சி., அறுவை சிகிச்சை அரங்கு மற்றும் மயக்கவியல் தொழில்நுட்பம் படித்துள்ளார். கோவை, புலியகுளத்தில் தங்கி, திருச்சி ரோட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்தார்.
மருத்துவமனையில் பணியில் இருந்த போது திடீரென அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. எர்ணாகுளத்தில் உள்ள பெற்றோருக்கு போனில் அழைத்து, ‘தனக்கு உடல்நிலை சரியில்லை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது சரியாக கவனிக்கவில்லை, எனவே தற்கொலை செய்து கொள்ள போகிறேன்’ எனக்கூறியுள்ளார்.
பின்னர் போனை அணைத்து வைத்துள்ளார். உடனடியாக பெற்றோர் கோவைக்கு வந்தனர். மாணவி தங்கியிருந்த இடம் மற்றும் மருத்துவமனையில் விசாரித்த போது அவரை காணவில்லை. புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
