/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வனக்கல்லூரியில் மாணவர் நல மன்ற விழா
/
வனக்கல்லூரியில் மாணவர் நல மன்ற விழா
ADDED : செப் 12, 2024 09:25 PM
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மாணவர் நல மன்ற தின விழா கல்லூரி முதல்வர் பாலசுப்ரமணியன் தலைமையில், நடைபெற்றது.
இவ்விழாவில் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது, மாணவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்கு வழங்கப்படும் பயிற்சிகள் மற்றும் பசுமை இந்தியா திட்டம் குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து கல்லூரியின் மாணவர் நல மன்றத்தின் கீழ் இயங்கும் 17 பல்வேறு வகையான துணை மன்றங்களின், கடந்த ஓராண்டிற்கான செயல்பாடுகளின் அறிக்கையை, புத்தகமாக வெளியிட்டார்.
இவ்விழாவில் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் தாவர வளம், வளம் குன்றிய நிலங்களின் மறுசீரமைப்பு, இலை மற்றும் பூ உள்ளிட்ட புத்தகங்களும் வெளியிடப்பட்டன.
இவ்விழாவில் வனக்கல்லூரியின் அனைத்து துறை பேராசிரியர்கள், துறை தலைவர்கள், அலுவலக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

