தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பா.ஜ.,வினரை கல்லால் தாக்கிய மாணவர் கைது

பா.ஜ.,வினரை கல்லால் தாக்கிய மாணவர் கைது

பா.ஜ.,வினரை கல்லால் தாக்கிய மாணவர் கைது


ADDED : மார் 30, 2024 11:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 30, 2024 11:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை;பா.ஜ.,வினரை கல்லால் தாக்கிய மாணவரை, போலீசார் கைது செய்தனர்.

கோவை லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக தொண்டர்கள், நிர்வாகிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் பா.ஜ.,வினர், 32வது வட்டம் எருக்கம்பெனி பகுதியில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கிருந்த வாலிபர் ஒருவர், பா.ஜ.,வினர் இங்கு பிரசாரத்திற்கு வர கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து கீழே கிடந்த கற்களை எடுத்து, பா.ஜ.,வினர் மீது வீசினார்.

இதில் பிரசாரத்திற்கு சென்ற, 2 ஆண்களும், 3 பெண்களும் காயமடைந்தனர். அதில் பிரபு, 40, என்பவருக்கு, பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவருக்கு பா.ஜ., மாவட்ட தலைவர் ரமேஷ் குமார், மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் கூறினார். இதுகுறித்து, கவுண்டம்பாளையம் போலீசில், புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து, கல்லுாரி மாணவரான சங்கனுார் ரோடு சண்முகா நகரை சேர்ந்த நவுசாத், 18, என்பவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us