/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளியில் குழந்தையை சேர்க்க மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
/
அரசு பள்ளியில் குழந்தையை சேர்க்க மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
அரசு பள்ளியில் குழந்தையை சேர்க்க மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
அரசு பள்ளியில் குழந்தையை சேர்க்க மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
ADDED : மார் 26, 2024 10:43 PM

நெகமம்;நெகமம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்கள் ஊர்வலமாகச் சென்று, அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கச் செய்ய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவ்வகையில், நெகமம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்களை ஒன்றிணைத்து, விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
பேரணியை, குறு மைய மேற்பார்வையாளர் சத்தியமூர்த்தி துவக்கி வைத்தார். மாணவர்கள், முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்றனர்.
அப்போது, 'எண்ணும் எழுத்தும், தொழிற்கல்வியில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு, நுாலகத்திற்கு தனிநேரம்', என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளைக் கைகளில் ஏந்தியவாறு சென்றனர்.
அரசு பள்ளி மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் குறித்து மக்களிடையே துண்டுப்பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.
அதில், அரசு பள்ளியில் காலை உணவு திட்டம், மதிய உணவு திட்டம், இலவச பாட புத்தகங்கள், இலவச சீருடைகள், காலணிகள் என, பல்வேறு நன்மைகள் குறித்த விபரங்கள் இடம்பெற்றிருந்தன.
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பள்ளிகள்தோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. பல அரசு பள்ளிகளில், பிளக்ஸ் அமைத்து, நலத்திட்டங்கள் குறித்த விபரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன,' என்றனர்.

