/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர்கள் கூடைப்பந்து; இறுதிக்கு சர்வஜனா பள்ளி தகுதி
/
மாணவர்கள் கூடைப்பந்து; இறுதிக்கு சர்வஜனா பள்ளி தகுதி
மாணவர்கள் கூடைப்பந்து; இறுதிக்கு சர்வஜனா பள்ளி தகுதி
மாணவர்கள் கூடைப்பந்து; இறுதிக்கு சர்வஜனா பள்ளி தகுதி
ADDED : ஆக 02, 2024 05:22 AM

கோவை: மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கூடைப்பந்து அரையிறுதியில் சுகுணா பள்ளியை வீழ்த்தி பி.எஸ்.ஜி., சர்வஜனா பள்ளி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
பெர்க்ஸ் மெட்ரிக்., பள்ளி சார்பில் சிறுவர்களுக்கு 39வது ஆண்டு டாக்டர் ராம ரங்கநாதன் நினைவு மாவட்ட கூடைப்பந்து போட்டி பள்ளி வளாகத்தில் ஜூலை 29ம் தேதி முதல் ஆக., 2ம் தேதி வரை நடக்கிறது.
சிறுவர்களுக்கு 13, 14, 19 ஆகிய வயது பிரிவுகளின் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அரையிறுதிப்போட்டி முடிவுகள்:
14 வயது பிரிவில் பி.எஸ்.ஜி., சர்வஜனா பள்ளி அணி 28 - 20 என்ற புள்ளிக்கணக்கில் சுகுணா பிப் பள்ளியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. மற்றொரு அரையிறுதியில் ராஜலட்சுமி மில்ஸ் அணி 66 - 26 என்ற புள்ளிக்கணக்கில் நேஷனல் மாடல் மெட்ரிக்., பள்ளியை வீழ்த்தியது.
19 வயது பிரிவில் சபர்பன் பள்ளி அணி 62 - 44 என்ற புள்ளிக்கணக்கில் ஸ்டேன்ஸ் பள்ளியையும், பெர்க்ஸ் அணி 53 - 37 என்ற புள்ளிக்கணக்கில் ஸ்டேன்ஸ் அணியையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.