sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கணிதம், வணிகவியல் தேர்வில் 'சென்டம்' கிடைக்கும்! மாணவ, மாணவியர் உற்சாகம்

/

கணிதம், வணிகவியல் தேர்வில் 'சென்டம்' கிடைக்கும்! மாணவ, மாணவியர் உற்சாகம்

கணிதம், வணிகவியல் தேர்வில் 'சென்டம்' கிடைக்கும்! மாணவ, மாணவியர் உற்சாகம்

கணிதம், வணிகவியல் தேர்வில் 'சென்டம்' கிடைக்கும்! மாணவ, மாணவியர் உற்சாகம்


ADDED : மார் 11, 2025 10:37 PM

Google News

ADDED : மார் 11, 2025 10:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நிருபர் குழு -

கணிதம், வணிகவியல் தேர்வு மிகவும் எளிமையாக இருந்ததால், நுாறு சதவீத மதிப்பெண்கள் கிடைக்கும் என, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, 38 மையங்களில் நடக்கிறது. நேற்று, மாணவர்கள், கணிதம், விலங்கியல் மற்றும் வணிகவியல் தேர்வுகளை எதிர்கொண்டனர்.

தேர்வு குறித்து, பொள்ளாச்சி விஸ்வதீப்தி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் கருத்து வருமாறு:

பவன்: கணக்கு தேர்வு நினைத்ததை விட மிகவும் எளிமையாக இருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்களில் இரண்டு மட்டும் புத்தகத்தின் உள்பகுதியில் இருந்து கேட்கப்பட்டிருந்தது. குறிப்பாக, இரண்டு, மூன்று, ஐந்து மதிப்பெண் வினாக்கள் எளிமையாக இருந்தது. திருப்புதல் தேர்வு வாயிலாக தீவிர பயிற்சி எடுத்திருந்ததால், அனைத்து வினாக்களுக்கும் எளிதாக இருந்தது. சென்டம் கிடைக்கும்.

வித்யஸ்ரீ: கணிதம் தேர்வில் ஒரு மதிப்பெண் வினாக்கள் மட்டுமின்றி, அனைத்து வினாக்களும் எளிமையாக இருந்தது. ஆசிரியர்கள் வாயிலாக தீவிர பயிற்சி மேற்கொண்டிருந்ததால், தேர்வை எளிதாக எதிர்கொள்ள முடிந்தது. அனைத்து வினாக்களுக்கும் சரியாக பதில் எழுதியுள்ளதால், நுாறு சதவீத மதிப்பெண் கிடைக்கும்.

வாணிஸ்ரீ: வணிகவியல் தேர்வில், அனைத்து வினாக்களும் எளிதாக இருந்ததால் விரைந்து தேர்வை எழுதி முடித்தேன். குறிப்பாக, கட்டாய மதிப்பெண், இரண்டு மற்றும் மூன்று மதிப்பெண் வினாக்கள் மிகவும் எளிதாக இருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்கள், புத்தகத்தில் உள்ளே இருந்து கேட்கப்பட்டிருந்தது. அனைத்து வினாக்களுக்கும் சரியாக பதில் எழுதியுள்ளதால் முழு மதிப்பெண் கிடைக்கும்.

மோகித், சுவாமி சித்பவானந்தா பள்ளி: வணிகவியல் தேர்வில் ஐந்து மதிப்பெண் கேள்வி ஒன்று மட்டும் கடினமாக இருந்தது. கட்டாய கேள்விகள் பகுதியில் ஒன்று கடினமாக இருந்தது. மற்றவைகள் அனைத்தும் எளிமையாக இருந்தது. தேர்வு எழுத நேரம் சரியாக இருந்தது. நிச்சயம் நல்ல மதிப்பெண் கிடைக்கும்.

* வால்பாறை திருஇருதய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கருத்து வருமாறு:

டியூபிரின்: வணிகவியல் தேர்வு எளிதாக இருந்தது. பள்ளியில் ஆசிரியர்கள் சொல்லி தந்த பாடங்களிலிருந்து பெரும்பாலான வினாக்கள் கேட்டகப்பட்டன. 1,3,5 மதிப்பெண்களுக்கான வினாக்களில், சில கடினமாக இருந்தன. இருந்தாலும் தேர்வை நல்லமுறையில் எழுதியுள்ளேன். அதிக மதிப்பெண்கள் கிடைக்கும்.

கிேஷார்: கணிதப்பாடத்தில் எதிர்பார்த்தது போல வினாக்கள் கேட்கப்பட்டன. இருப்பினும் 3 மற்றும் 5 மதிப்பெண்களுக்கான வினாக்கள் சில கடினமாக இருந்தன. பயிற்சி பெற்ற பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டதால், தேர்வை விரைவாகவும், தெளிவாகவும் எழுதியுள்ளேன். அதிக மதிப்பெண்கள் பெறுவேன்.

* உடுமலை, கொமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கருத்து:

திவ்யமாலினி: விலங்கியல் பாடத்தேர்வு எளிதாக இருந்தது. ஐந்து மதிப்பெண் பகுதிகளில், ஒரு வினா மட்டும் குழப்பும் வகையில் இருந்தது. மற்ற பகுதிகளான இரண்டு மற்றும் மூன்று மதிப்பெண் வினா எளிமையாகவே இருந்தது. பயிற்சி செய்த வினாக்கள் அதிகம் கேட்கப்பட்டிருந்தது.

பலராம்: கலைப்பிரிவாக இருப்பினும் கூடுதல் கவனம் செலுத்தியதால், வணிகவியல் தேர்வு எளிமையாக இருந்தது. ஒன்று, இரண்டு மற்றும் மூன்று மதிப்பெண் பகுதிகள் சுலபமாக இருந்தது. ஐந்து மதிப்பெண் பகுதியில் ஒரு வினா இதுவரை கேட்கப்படாததாக இருந்தது. இருப்பினும் தெரிந்தவரை விடை எழுதி இருக்கிறேன். நல்ல மதிப்பெண் எதிர்பார்க்கிறேன்.

கீதாஸ்ரீ: கணிதத்தேர்வு எதிர்பார்த்த வகையில் இல்லை. இருப்பினும் ஓரளவு எளிமையாக இருந்தது. இரண்டு மற்றும் மூன்று மதிப்பெண் பகுதிகள், எளிதாக விடை எழுத முடிந்தது. ஒரு மதிப்பெண் பகுதியில் புத்தகத்தின் உள்ளிருந்தும், குழப்பும் வகையிலும் நான்கு வினாக்கள் கேட்கப்பட்டன. ஐந்து மதிப்பெண் பகுதியில், ஐந்து வினாக்கள் எளிதாக விடை எழுதும் வகையில் இருந்தன. இரண்டு வினாக்கள் யோசித்து எழுத வேண்டியிருந்தது.

* பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கருத்து:

மகேந்திரன்: எதிர்பார்த்த வகையில், கணித வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்தது. ஒரு மதிப்பெண் மற்றும் மூன்று மதிப்பெண் வினாக்கள் குழப்பும் வகையில் இருந்தன. ஐந்து மதிப்பெண் பகுதி வினாக்கள் சுலபமாக இருந்தது. அதில் ஒரு வினா மட்டும் குழப்பமாக இருந்தது. மற்ற பகுதிகள் நேரடியான வினாக்களாக இருந்ததால் விரைவில் தேர்வு எழுத முடிந்தது.

நந்தினிப்ரியா: வணிகவியல் வினாத்தாள் சராசரியாக இருந்தது. புத்தகத்தின் உள்ளிருந்து அதிகமான வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. சதம் எடுப்பது சந்தேகம் என்ற வகையில் தான் வினாத்தாள் இருந்தது. வினாக்களை புரிந்து கொள்வதற்கே அதிக நேரம் தேவைப்பட்டது. அடுத்தடுத்த தேர்வுகள் எளிமையாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறோம்.






      Dinamalar
      Follow us