/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முயல் பண்ணையில் மாணவர்கள் களஆய்வு
/
முயல் பண்ணையில் மாணவர்கள் களஆய்வு
ADDED : ஏப் 24, 2024 10:29 PM

பொள்ளாச்சி: கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை மாணவர்கள், முயல் பண்ணையில் நேரடியாக களஆய்வு செய்து, அதன் வளர்ப்பு முறைகள் கேட்டறிந்தனர்.
கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலை மாணவர்கள், அவ்வப்போது, பல்வேறு திட்டங்களின் கீழ் களப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அவ்வகையில், நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்கள், கிராமப்புற வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ், பொள்ளாச்சி அருகே வேடசந்துாரில் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, கருணபிரகாஷ் என்பவருக்கு சொந்தமான முயல் பண்ணைக்கு நேரடியாகச் சென்றனர். பின்னர், முயல் வளர்ப்புக்கான அடிப்படை வசதிகள், முயல் இனங்கள், முயல்களுக்கு வழங்கப்படும் தீவனங்கள், முயல் இனங்களை தாக்கும் பொதுவான நோய்களும் மற்றும் அதற்கான தடுப்பூசிகள் குறித்து உரிமையாளரிடம் கேட்டறிந்தனர்.
மேலும், முயல்களின் கழிவுகள் விவசாயத்திற்கு சிறந்த உரமாக மாற்றும் முறை குறித்த விபரங்களையும் சேகரம் செய்தனர்.

