/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர்கள் இலக்கு மேலாண்மை விழா
/
மாணவர்கள் இலக்கு மேலாண்மை விழா
ADDED : ஜூலை 06, 2024 02:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி;பொள்ளாச்சி சக்தி தகவல் மேலாண்மை கல்லுாரியில், 'எய்ம்ஸ்' மேலாண்மை வார விழா கொண்டாடப்பட்டது. கல்லுாரி இயக்குனர் சர்மிளா தலைமை வகித்தார். 'தலைமை சிறப்பு' என்ற தலைப்பில் மாணவர்களிடம் பேராசிரியர்கள் பேசினர்.
விளையாட்டு வாயிலாக கற்றலில் மாணவர்கள் குழுவாக செயல்படுவது, தலைமை பண்பை வளர்த்துக் கொள்வது மற்றும் அனுபவ கற்றல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, பேராசிரியர் பிரியதர்ஷினி மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.