/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராம தங்கல் திட்டத்தில் கள ஆய்வில் மாணவர்கள்
/
கிராம தங்கல் திட்டத்தில் கள ஆய்வில் மாணவர்கள்
ADDED : ஏப் 16, 2024 11:20 PM

கிணத்துக்கடவு;பொள்ளாச்சி, மணக்கடவு வாணவராயர் வேளாண் கல்லுாரி மாணவர்கள், கிணத்துக்கடவில் களஆய்வு செய்தனர்.
பொள்ளாச்சி, மணக்கடவு வாணவராயர் வேளாண் கல்லுாரி மாணவர்கள், கிராம தங்கல் திட்டத்தில் கிணத்துக்கடவு ஒன்றியத்தில், இரண்டு மாத காலம் பயிற்சி மேற்கொள்கின்றனர்.
இதில், கிணத்துக்கடவு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடக்கும் 'இ - நாம்' திட்டம் பற்றி விற்பனை கூட கண்காணிப்பாளர் செல்வராஜிடம் கேட்டறிந்தனர்.
மேலும், கல்லாபுரத்தில் உள்ள தனியார் பப்பாளி தோட்டத்தில், ஆய்வு மேற்கொண்டு அதில் உள்ள நன்மைகள், பாதுகாப்பு முறைகள் மற்றும் நோய் தடுப்பு முறைகள் குறித்து கேட்டறிந்தனர்.
சொக்கனுார் பகுதியில் உள்ள தென்னை நார் தொழிற்சாலையில், உற்பத்தி செய்யும் பொருட்கள் மற்றும் அதன் பயன்கள் குறித்து கேட்டறிந்தனர்.

