/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிகளில் கலைத்திருவிழா மகிழ்ச்சியில் மாணவர்கள்
/
பள்ளிகளில் கலைத்திருவிழா மகிழ்ச்சியில் மாணவர்கள்
ADDED : ஆக 27, 2024 01:40 AM

வால்பாறை;வால்பாறையில் உள்ள துவக்கப்பள்ளிகளில் மாணவர்களுக்கான கலை விழா போட்டிகள் துவங்கியது.
அரசு பள்ளி மாணவர்களிடையே கலைத்திறன்களை வெளிப்படுத்துவதற்கு, ஆண்டு தோறும் கலைத்திருவிழா நடத்தப்படுகிறது. போட்டிகள் பள்ளி அளவில் துவங்கி, வட்டாரம், மாவட்டம், மாநில அளவில் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்படுகின்றன.
கடந்த கல்வி ஆண்டில், ஆறு முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டுமே இந்த போட்டிகள் நடத்தப்பட்டன. நடப்பாண்டு, துவக்கப்பள்ளி மாணவர்களும் கலைத்திருவிழாவில் பங்கேற்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில், வால்பாறையில் உள்ள, 51 ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, 18 அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளிகளில் பள்ளி அளவிலான கலைவிழா நடக்கிறது.
நல்லகாத்து ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்த விழாவுக்கு, தலைமை ஆசிரியர் ரஞ்சித் தலைமை வகித்தார்.
போட்டியை வட்டார கல்வி அலுவலர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்து பேசுகையில், ''முதல் கட்டமாக பள்ளி அளவிலும், இரண்டாவது கட்டமாக வட்டார அளவிலும் போட்டிகள் நடத்தப்பட்டு, மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படும்,'' என்றார்.