/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மதுக்கரை குறுமைய விளையாட்டு அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்
/
மதுக்கரை குறுமைய விளையாட்டு அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்
மதுக்கரை குறுமைய விளையாட்டு அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்
மதுக்கரை குறுமைய விளையாட்டு அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்
ADDED : ஆக 18, 2024 10:41 PM
கோவை:மதுக்கரை குறுமையத்துக்கு உட்பட்ட, பள்ளிகளுக்கு இடையேயான கோ கோ, வாலிபால் போட்டிகளில் அரசு பள்ளி மாணவர்கள் அசத்தலாக விளையாடி, மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
பள்ளிக்கல்வித்துறையின் மதுக்கரை குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டிகள், செயின்ட் ஆன்ஸ் பள்ளி சார்பில் நடத்தப்படுகிறது. இதன் குழு விளையாட்டு போட்டிகள் காளியாபுரம், நேரு தொழில்நுட்பக் கல்லுாரி மைதானத்தில் நடக்கிறது.
நேற்று முன்தினம் நடந்த போட்டிகளை, நேரு தொழில்நுட்பக் கல்லுாரி முதல்வர் சிவரஞ்சன், நிர்வாகிகள் முரளிதரன், புவனேஸ்வரி மற்றும் உடற்கல்வி இயக்குனர் மாரிமுத்துகுமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
மாணவர்கள் பிரிவு வாலிபால் மற்றும் கோ கோ போட்டிகள் 14, 17, 19 ஆகிய மூன்று வயது பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்டன.
கோ கோ
14 வயது பிரிவில் குளோபல் பாத்வே பள்ளி முதலிடம், செட்டிபாளையம் அரசு பள்ளி இரண்டாம் இடம்; 17 குளோபல் பாத்வே முதலிடம், வெள்ளலுார் நிர்மல மாதா இரண்டாம் இடம்; 19 வயது பிரிவில் செட்டிபாளையம் அரசு பள்ளி முதலிடம், குளோபல் பாத்வே இரண்டாம் இடம் பிடித்தன.
வாலிபால்
14 வயது பிரிவில் குரும்பபாளையம் அரசு பள்ளி முதலிடம், கெங்குசாமி நாயுடு பள்ளி இரண்டாம் இடம்; 19 வயது பிரிவில் மதுக்கரை அரசு பள்ளி முதல் இடம், ஸ்ரீ சக்தி மெட்ரிக்., இரண்டாம் இடம் பிடித்தது.