/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஏ.ஜே.கே., கல்லுாரியில் மாஸ்டர் செப் பயிற்சி: மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்

ADDED : மே 06, 2024 12:19 AM

போத்தனுார்:நவக்கரையிலுள்ள ஏ.ஜே.கே., கல்லுாரியில் நடந்த இளம் மாஸ்டர் செப்- 2024, பயிற்சி பட்டறை நேற்று நிறைவடைந்தது.
ஏ.ஜே.கே., கல்லுாரி மற்றும் 'தினமலர்' நாளிதழ் இணைந்து, பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்காக இலவச பயிற்சி பட்டறை நேற்று முன்தினம் துவங்கியது. இதில் சாலட், சாண்ட்விச், சூப், புலாவ், சிக்கன், வெஜிடபிள் கிரேவி, ஸ்வீட் உள்ளிட்டவை தயாரிப்பது குறித்து கற்றுத்தரப்பட்டது.
இதில், ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
உணவு அறிவியல் மற்றும் விடுதி மேலாண்மை துறை டீன் செப் பிது பூஷன்தாஸ், உதவி பேராசிரியர் செப் நல்லதம்பி ஆகியோர் உணவு வகைகள் செய்வது குறித்து பயிற்சியளித்தனர்.
மேலும் உணவுகளை அழகுபடுத்துவது, காய்கறிகளில் உருவங்கள் உருவாக்குவது குறித்தும் கற்றுத் தரப்பட்டது.
நிறைவு நாளான நேற்று கப் கேக், குக்கீஸ், மாக்டெயில் (பழரச கலவை), சிக்கன் மற்றும் வெஜிடபிள் பிரியாணி உள்ளிட்டவை கற்றுத்தரப்பட்டது.
துறையின் டீன் செப் பிது பூஷன்தாஸ் கூறுகையில், '' மிக எளிதாக உணவு தயாரிக்கும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. செய்முறைகளை ஆர்வத்துடன் கற்றுக்கொண்டனர். துறையின் வேலைவாய்ப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது'' என்றார்.