/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மலரும் நினைவுகளை பகிர்ந்த 'ஆர்.கே.எஸ்.-75' மாணவர்கள்
/
மலரும் நினைவுகளை பகிர்ந்த 'ஆர்.கே.எஸ்.-75' மாணவர்கள்
மலரும் நினைவுகளை பகிர்ந்த 'ஆர்.கே.எஸ்.-75' மாணவர்கள்
மலரும் நினைவுகளை பகிர்ந்த 'ஆர்.கே.எஸ்.-75' மாணவர்கள்
ADDED : செப் 04, 2024 12:09 AM
கோவை;'ஆர்.கே.எஸ்.-75' முன்னாள் மாணவர்கள் சந்தித்து, மலரும் நினைவுகளை குடும்பத்துடன் பகிர்ந்து கொண்டனர்.
அவிநாசி ரோட்டில் உள்ள ஆர்.கே.ஸ்ரீ ரங்கம்மாள் கல்வி நிலையத்தில், 1975ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி., முடித்த முன்னாள் மாணவர்கள், சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
கல்வியை முடித்து, 50 ஆண்டு நிறைவு பெற்றதையடுத்து, சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள தனியார் தோப்பில், 35 மாணவர்களின் குடும்பத்தினர் சந்தித்து மகிழ்ந்தனர்.
காலை 10:00 முதல் மாலை, 4:30 மணி வரை வினாடி வினா, குறுக்கெழுத்து போட்டி என, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
'ஆர்.கே.எஸ்.,-75' முன்னாள் மாணவர்கள் சங்கத்தில், விடுபட்ட முன்னாள் மாணவர்களை இணைத்து, ஆண்டுதோறும் இவர்கள் சந்தித்து மகிழ்கின்றனர். சங்கத்தலைவர் ராஜேந்திரன், உபதலைவர் பார்த்திபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.