/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓவியம் வரைதல் போட்டி மாணவர்கள் பங்கேற்பு
/
ஓவியம் வரைதல் போட்டி மாணவர்கள் பங்கேற்பு
ADDED : டிச 09, 2024 06:56 AM

பாலக்காடு: மாவட்ட பால் பண்ணையாளர்கள் சங்கமத்தையொட்டி, குழந்தைகளுக்கு ஓவியம் வரைதல் போட்டி நடந்தது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், சித்துார் நெல்லிமேடு அரசு ஆரம்பப் பள்ளிக்கூடத்தில், பால்வள மேம்பாட்டுத்துறை சார்பில், நேற்று நடந்த ஓவியம் வரைதல் போட்டியை, சித்துார் வட்டார ஊராட்சித்தலைவர் சுஜாதா துவக்கி வைத்தார். பெருமாட்டி ஊராட்சி துணைத்தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார்.
ஆரம்பப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளி மாணவர்களுக்காக, ஓவியம் வரைதல் போட்டியும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்காக கட்டுரைப் போட்டியும் நடந்தன. மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து, நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த போட்டிகளில் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசுகள் வரும் 16, 17 தேதிகளில் பிளாச்சிமடையில் மாவட்ட பால் பண்ணையாளர்கள் சங்கமத்தில் வழங்கப்படும். போட்டியில் கலந்து கொள்ள வந்த மாணவர்களுக்கு, ஓவிய ஆசிரியர் ராதாகிருஷ்ணன் வகுப்பு எடுத்தார்.