sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

காலாண்டு தேர்வுக்கு மாணவர்கள் ஆயத்தம்; வரும் 19ல் துவங்கி 27ம் தேதி வரை நடக்கிறது

/

காலாண்டு தேர்வுக்கு மாணவர்கள் ஆயத்தம்; வரும் 19ல் துவங்கி 27ம் தேதி வரை நடக்கிறது

காலாண்டு தேர்வுக்கு மாணவர்கள் ஆயத்தம்; வரும் 19ல் துவங்கி 27ம் தேதி வரை நடக்கிறது

காலாண்டு தேர்வுக்கு மாணவர்கள் ஆயத்தம்; வரும் 19ல் துவங்கி 27ம் தேதி வரை நடக்கிறது


ADDED : செப் 11, 2024 10:31 PM

Google News

ADDED : செப் 11, 2024 10:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 19ம் தேதி முதல் 27ம் தேதி வரை காலாண்டு தேர்வு நடத்தப்படுகிறது.

அதன்படி, 6 முதல் 10ம் வகுப்பு வரை, வரும் 20ம் தேதி முதல் 27 வரையிலும் தேர்வு நடக்கிறது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு வரும் 19ம் தேதி முதல் 27ம் தேதி வரையிலும் காலாண்டு தேர்வு நடத்தப்படும்.

அதற்கேற்ப, பாடங்களை கற்பிப்பதில் ஆசிரியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். மாணவ, மாணவியரும், பாடங்களை படித்து தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

அரசு பள்ளிகளில், 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, வரும், 20ம் தேதி தேர்வு துவங்குகிறது. அதன்படி, 20ம் தேதி தமிழ், 21ம் தேதி - உடற்கல்வி, 23ல் - ஆங்கிலம், 24ல் - விருப்ப மொழி, 25ல் - கணிதம், 26ல் -- அறிவியல், 27ல் -- சமூக அறிவியல் பாடத் தேர்வு நடத்தப்படுகிறது.

இதேபோல, 6ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை, 9:30 முதல் 11:30 மணி வரையும், 7ம் வகுப்புக்கு மதியம், 1:15 முதல் 3:15 மணி வரையும், 8ம் வகுப்புக்கு, காலை, 9:30 முதல் பகல் 12:00 மணி வரையும், 9ம் வகுப்புக்கு மதியம், 1:15 முதல் மாலை, 4:30 மணி வரையும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை, 9:30 முதல், 12:45 மணி வரையும் தேர்வு நடத்தப்படுகிறது.

பிளஸ் 1 மாணவர்களுக்கு மதியம், 1:15 மணி முதல், மாலை, 4:30 மணி வரையும், பிளஸ் 2 மாணவர்களுக்கு காலை, 9:30 முதல், 12:45 மணி வரையும் தேர்வு நடத்தப்படுகிறது.

அதன்படி, 19ம் தேதி தமிழ், 20ம் தேதி ஆங்கிலம், 21ம் தேதி இயற்பியல், பொருளியல், வேலைவாய்ப்பு திறன்; 23ல் கணக்கு, விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், சத்துணவு மற்றும் தொழில்கல்வி; 25ல் வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் தேர்வு நடக்கிறது.

26ம் தேதி இந்திய பண்பாடு மற்றும் நெறிமுறைகள், கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், உயிரி வேதியியல், சிறப்பு தமிழ், மனையியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்; 27ம் தேதி, உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், தொழில்பாடங்கள் நடக்கிறது.

பிளஸ் 2 மாணவர்களுக்கு, 19ம் தேதி தமிழ், 20ம் தேதி ஆங்கிலம், 21ம் தேதி இயற்பியல், பொருளியல், வேலைவாய்ப்பு திறன்; 23ம் தேதி கணக்கு, விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், சத்துணவு மற்றும் தொழில்கல்வி; 25ம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் தேர்வு நடக்கிறது.

26ம் தேதி, இந்திய பண்பாடு மற்றும் நெறிமுறைகள், கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், உயிரி வேதியியல், சிறப்பு தமிழ், மனையியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்; 27ம் தேதி, வேதியியல், கணக்குப்பதிவியல்,புவியியல் தேர்வு நடக்கிறது.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us