/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மாணவர்களின் திறனை கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும்'
/
'மாணவர்களின் திறனை கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும்'
'மாணவர்களின் திறனை கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும்'
'மாணவர்களின் திறனை கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும்'
ADDED : செப் 04, 2024 11:25 PM

விஜயலட்சுமி, பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்: ஆசிரியர் சமுதாயம் என்பது, மாணவர்களை ஒரு உயரத்திற்கு கொண்டு செல்லும் ஏணிகளாக இருக்கின்றனர். மாணவர்களின் திறன்களை ஊக்குவிப்பதுடன், அதை மேம்படுத்திக்கொள்வதற்கான வழிகளையும் அவர்களுக்கு காட்டுகின்றனர்.
இப்போதைய போட்டி மிகுந்த உலகில் மாணவர்கள் சந்திக்க வேண்டிய பிரச்னைகள் குறித்தும், அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பதையும் அவ்வப்போது எடுத்துகூறி, அவர்களை மனதளவில் தன்னம்பிக்கையான மாணவர்களாக மாற்றுவதற்கும் ஆசிரியர்கள் அரும்பாடுபடுகின்றனர்.
மாணவர்கள் படித்து முடித்து சிறந்த நிலைக்கு வந்தபின், அதற்கு காரணம் ஆசிரியர்கள் என கூறும்போது, பெற்ற பிள்ளைகள் அளிக்கும் பெருமையை விடவும் மனநிறைவு ஆசிரியர்களுக்கு ஏற்படுகிறது.
எந்த இலக்குடன், புத்துணர்ச்சியுடன் ஆசிரியர் பணியை துவங்கினோமோ, அதே வேகம் பணி நிறைவு செய்யும் வரை இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.