/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதிய சிந்தனைகளை மாணவர்கள் வளர்க்க வேண்டும்
/
புதிய சிந்தனைகளை மாணவர்கள் வளர்க்க வேண்டும்
ADDED : ஏப் 17, 2024 01:13 AM

கோவை;காளப்பட்டி, நேரு நகர், சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடந்தது.
விழாவிற்கு பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரியின் முதல்வர் பிருந்தா, கொச்சி, உரங்கள் மற்றும் ரசாயனம் திருவிதாங்கூர் நிறுவனத்தின் இயக்குனர் அனுபம் மிஸ்ரா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
விருந்தினர்கள் பேசுகையில், ''மாணவர்கள் கல்வியுடன், ஓழுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டும். புதிய, புதிய சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்'' என்றார்.
கல்வி, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
சின்னத்திரை கலைஞர் ராஜ்குமார், பலகுரலில் பேசி மாணவர்களை உற்சாகப்படுத்தினார். ஆடல், பாடல் என மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்வுகளும் நடந்தது.
சுகுணா குழுமத்தின் தலைவர் லட்சுமிநாராயணசாமி, தாளாளர் சுகுணா, இயக்குனர் பிரகாசம், சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி இயக்குனர் சேகர், முதல்வர் ராஜ்குமார் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டனர்.

