/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மாணவர்கள் நடைமுறை அறிவை பெறுவதில் கவனம் செலுத்தணும்!'
/
'மாணவர்கள் நடைமுறை அறிவை பெறுவதில் கவனம் செலுத்தணும்!'
'மாணவர்கள் நடைமுறை அறிவை பெறுவதில் கவனம் செலுத்தணும்!'
'மாணவர்கள் நடைமுறை அறிவை பெறுவதில் கவனம் செலுத்தணும்!'
ADDED : செப் 07, 2024 03:05 AM
பொள்ளாச்சி:மாணவர்கள் படிப்பில் மட்டுமின்றி நடைமுறை அறிவை பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது.
பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரியில், 2024--25ம் கல்வியாண்டின், பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.சி.ஏ., பாட திட்டங்களுக்கான முதலாமாண்டு துவக்க விழா நடந்தது.
என்.ஐ.ஏ., கல்லுாரி நிறுவனங்களின் செயலாளர் ராமசாமி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கோவிந்தசாமி ஆண்டறிக்கை வாசித்தார்.
என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்களின் தலைவர் மாணிக்கம் தலைமை வகித்து பேசுகையில், ''மாணவர்கள் தங்கள் படிப்பை முடிப்பதை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல், விரிவான, நடைமுறை அறிவைப் பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும். இதன் வாயிலாக அவரவர், தங்களின் திறமைகளை செம்மைப்படுத்துவதுடன், வேலைவாய்ப்புகளையும் எளிதில் பெற முடியும்,'' என்றார்.
சென்னை, டெசால்வ் செமிகண்டக்டரின் வி.எல்.எஸ்.ஐ., வடிவமைப்பு துறை பொறியியல் துணைத் தலைவர் கார்த்திக் பேசுகையில், ''திறமையான சர்க்யூட் ஸ்ட்ரீம் மாணவர்கள், மென்பொருள் ஸ்ட்ரீம்களை நோக்கிச் செல்வதை விட, தங்கள் முக்கிய பொறியியல் துறையில் கவனம் செலுத்த வேண்டும்.
மாணவர்கள் தங்கள் முயற்சிகளை ஒருமுகப்படுத்தி, வாழ்க்கையில் முன்னேறுவதற்கு அயராது உழைக்க வேண்டும்,'' என்றார்.
கல்லுாரி தாளாளர் ஹரிஹரசுதன், முன்னாள் மாணவர் கார்த்திக்சங்கர் ஆகியோர் மாணவர்கள் மேம்பாடு குறித்து பேசினர். என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்கள் தலைமை மனிதவள அதிகாரி சுப்ரமணியன், டீன்கள் செந்தில்குமார், ராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், டீன்- செந்தில்குமார் நன்றி கூறினார்.