/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சி பள்ளியில் 'சயின்டிஸ்ட்' கனவுடன் 'பட்டம்' பெற்ற மாணவ மாணவியர்!
/
மாநகராட்சி பள்ளியில் 'சயின்டிஸ்ட்' கனவுடன் 'பட்டம்' பெற்ற மாணவ மாணவியர்!
மாநகராட்சி பள்ளியில் 'சயின்டிஸ்ட்' கனவுடன் 'பட்டம்' பெற்ற மாணவ மாணவியர்!
மாநகராட்சி பள்ளியில் 'சயின்டிஸ்ட்' கனவுடன் 'பட்டம்' பெற்ற மாணவ மாணவியர்!
ADDED : மார் 23, 2024 01:41 AM

கோவை;'ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்.,- சயின்டிஸ்ட் - டாக்டர் ஆக உருவெடுப்போம்' என்ற உறுதிமொழியுடன், மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் நேற்று 'பட்டம்' பெற்றனர்.
மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், 2019ம் ஆண்டு முதல் முறையாக பட்டமளிப்பு விழா நடந்தது. கொரோனா காரணமாக இடைப்பட்ட காலங்களில், இவ்விழா இடம்பெறவில்லை. நேற்று இரண்டாவது பட்டமளிப்பு விழா நடந்தது.
இதில், ஐந்தாம் வகுப்பு பயின்ற, 82 பேருக்கும், எட்டாம் வகுப்பு பயின்ற, 31 பேருக்கும் என, 113 மாணவர்களுக்கு, ராக் அமைப்பு செயலாளர் ரவீந்திரன், மாநகராட்சி கல்வி பிரிவு மேற்பார்வையாளர் பூங்கொடி ஆகியோர், பட்ட சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தினர்.
கறுப்பு கவுன், தொப்பி அணிந்து பட்ட சான்றிதழ் வாங்க வரிசையாக குழந்தைகள் வந்தபோது, 'டாக்டர்களாக விரும்பும் தீபிகா, திவாஷினி, ஐ.பி.எஸ்., அதிகாரியாக விரும்பும் ஜனனி, விஞ்ஞானியாக விருபும்பும் அக்ஷரா' என, ஒவ்வொரு குழந்தையின் கனவு குறித்தும் ஆசிரியர்கள் ஒலிப்பெருக்கியில் அறிவித்து, பெற்றோர் முன்னிலையில் உற்சாகப்படுத்தினர்.
பள்ளி தலைமையாசிரியர் மைதிலி பேசுகையில், ''இலக்கை அடைய அர்ப்பணிப்புடன் செயல்படுவது அவசியம். குழந்தைகளுக்கு பாதை அமைத்து, வழிநடத்தும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு மட்டுமின்றி, பெற்றோருக்கும் உள்ளது.
அடுத்த கட்டத்துக்கு செல்லும் குழந்தைகளை ஊக்குவிக்கவே, மாணவர்களுக்கு பட்ட சான்றிதழ்கள் வழங்குகிறோம். இடைநிற்றலை தவிர்த்து, மாணவர்கள் தொடர் கல்வி பயில, அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாணவர்கள் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்தி முன்னேற வேண்டும்,'' என்றார்.

