/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கே.ஜி., விளையாட்டு போட்டி வினேஷ் போகத்துக்கு சமர்ப்பிப்பு
/
கே.ஜி., விளையாட்டு போட்டி வினேஷ் போகத்துக்கு சமர்ப்பிப்பு
கே.ஜி., விளையாட்டு போட்டி வினேஷ் போகத்துக்கு சமர்ப்பிப்பு
கே.ஜி., விளையாட்டு போட்டி வினேஷ் போகத்துக்கு சமர்ப்பிப்பு
ADDED : ஆக 20, 2024 12:10 AM
கோவை:ஒலிம்பிக் வீராங்கனை வினேஷ் போகத்துக்கு சமர்ப்பணம் செய்யும் வகையில் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்கள் பங்கேற்ற விளையாட்டு போட்டி நடந்தது. மாநகர துணை கமிஷனர் சரவணகுமார் துவக்கி வைத்தார்.
'கே.ஜி.ஸ்போர்ட்ஸ் டே 2024' என்ற பெயரில், மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்கள் உட்பட, 1000க்கும் மேற்பட்டோருக்கான விளையாட்டு போட்டி, சரவணம்பட்டியில் உள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல்., மைதானத்தில் நடைபெற்றது.
ஒலிம்பிக் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு இந்த விளையாட்டு போட்டியை, சமர்ப்பிக்கும் விதமாக இப்போட்டி நடத்தப்பட்டது.
மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார், கே.ஜி.மருத்துவமனை தலைவர் டாக்டர் பக்தவத்சலம் ஆகியோர் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்தும், புறாக்களை பறக்க விட்டும் துவக்கி வைத்தனர்.
பல்வேறு பிரிவுகளின் கீழ், 100, 200 மீட்டர் ஓட்டபந்தயம், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இறுதியில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.

