/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மானிய விலையில் காய்கறி, பூ நாற்றுகள்
/
மானிய விலையில் காய்கறி, பூ நாற்றுகள்
ADDED : மே 28, 2024 10:36 PM
மேட்டுப்பாளையம்:சர்க்கார் சாமக்குளம் வட்டார விவசாயிகள், பயிர்களின் பரப்பை விரிவாக்கம் செய்ய மானியம் வழங்கப்படுகிறது.
தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை வாயிலாக சர்க்கார் சாமக்குளம் வட்டார விவசாயிகள், பயிர்களின் பரப்பை விரிவாக்கம் செய்ய மானியம் வழங்கப்படுகிறது.
அதன்படி காய்கறி பயிர்களான தக்காளி, கத்திரி, மிளகாய் நாற்றுகள், பழ வகைகளான பப்பாளி, எலுமிச்சை மற்றும் மா நாற்றுகள், பூ வகைகளான மல்லிகை, சம்பங்கி நாற்றுகள் மற்றும் இடுபொருட்கள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது.
விவசாயிகள், சர்க்கார் சாமக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி சிட்டா, அடங்கல், ஆதார், புகைப்படங்கள் கொண்டு பதிவு செய்து மானிய பலன்களை பெற்றுக் கொள்ளலாம்.
உழவன் செயலி வாயிலாகவும் பதிவு செய்து பயன் பெறலாம் என, சர்க்கார் சாமக்குளம் வட்டார தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் மதுபாலா தெரிவித்துள்ளார்.