/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வளர்ச்சி வாரிய திட்டத்தில் விவசாயிகளுக்கு மானியம்
/
வளர்ச்சி வாரிய திட்டத்தில் விவசாயிகளுக்கு மானியம்
ADDED : ஜூலை 06, 2024 02:14 AM
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு தோட்டக்கலை துறை சார்பில், தென்னை வளர்ச்சி வாரிய திட்டம் வாயிலாக விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்கப்படுகிறது.
கிணத்துக்கடவு தோட்டக்கலை துறை சார்பில், விவசாயிகளுக்கு, தென்னை வளர்ச்சி வாரிய திட்டம் 2024-25 வாயிலாக தென்னை மறுநடவு மற்றும் புனரமைக்க மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு, 500 ஹெக்டேர் அளவு நிலம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதில் விவசயிகளுக்கு, ஒரு ஹெக்டேர் அளவு தென்னை நடவு மற்றும் பராமரிப்பு செய்ய, 17,500 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
தென்னையில், நோய் மற்றும் பூச்சி தாக்குதல், காய்ப்பு குறைவான மரங்கள் வெட்டி அகற்றம் செய்ய, மரம் ஒன்றுக்கு, ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. ஒரு விவசாயி அதிகபட்சமாக, 32 மரங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
வெட்டிய மரங்களுக்கு பதில் மரங்கள் மறு நடவு செய்ய ஒரு தென்னங்கன்றுக்கு, 40 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இதில், ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக, 100 தென்னங்கன்றுகள் வழங்கப்பட உள்ளது.
விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்ய, சிட்டா, அடங்கல், ஆதார், ரேஷன் கார்டு, பேங்க் பாஸ் புக், 3- போட்டோ போன்ற ஆவணங்களை தோட்டக்கலை துறை அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.
முன்பதிவு செய்த விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், திட்டங்கள் குறித்து விபரங்கள் அறிய தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும்.
இத்தகவலை கிணத்துக்கடவு தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ஜமுனாதேவி தெரிவித்தார்.