/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பனை விவசாயத்தை மேம்படுத்த மானியம்
/
பனை விவசாயத்தை மேம்படுத்த மானியம்
ADDED : ஆக 01, 2024 12:44 AM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு வட்டாரத்தில் பனை விவசாயத்தை மேம்படுத்த விவசாயிகளுக்கு, மானியத்தில் விதை மற்றும் கன்றுகள் வழங்கப்படுகிறது.
பனை மரம் காற்று மற்றும் புயல் போன்றவைகளில் பாதிப்படையாமல் நிலைத்து நிற்கும் தன்மை உடையவை. பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மீள்தன்மைக்கு உதவுகிறது. மேலும், மண்ணை நிலைப்படுத்துவதன் வாயிலாக, மண் அரிப்பை தடுக்கிறது.
இத்தகைய முக்கியத்துவம் உள்ள பனையை, கிணத்துக்கடவு வட்டாரத்தில் மேம்படுத்த தோட்டக்கலை துறை சார்பில் பனை விதை மற்றும் கன்றுகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
பனை மேம்பாட்டு இயக்கம், 2024 - 25 திட்டத்தின் வாயிலாக, தனி நபருக்கு, 50 பனை விதைகள், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கு, 100 பனை விதைகள், 100 சதவீதம் மானியத்தில் வழங்கப்படும்.
மேலும், தனிநபருக்கு 15 பனங்கன்றுகள், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கு, 30 பனங்கன்றுகள், 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும். இத்தகவலை, கிணத்துக்கடவு தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜமுனாதேவி தெரிவித்தார்.