/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புறநகர் குறுமைய குழு விளையாட்டு துவக்கம்
/
புறநகர் குறுமைய குழு விளையாட்டு துவக்கம்
ADDED : ஆக 06, 2024 11:13 PM

கோவை : புறநகர் குறுமையத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு இடையேயான குழு விளையாட்டு போட்டிகள், பாரதியார் பல்கலை மைதானத்தில் நடக்கின்றன.
புறநகர் குறுமையத்துக்கு உட்பட்ட விளையாட்டு போட்டிகள், மதர்லேண்ட் பள்ளி சார்பில் நடக்கின்றன. இதன் குழு விளையாட்டு போட்டி, பாரதியார் பல்கலை மைதானத்தில் நடக்கிறது.
போட்டியை, மதர்லேண்ட் பள்ளி நிறுவனர் கோவை தம்பி, தாளாளர் சீதா, முதல்வர் லதா ஆகியோர் துவக்கி வைத்தனர். முதல் நாள் மாணவியருக்கான குழு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாணவியருக்கு கால்பந்து, கோ கோ, த்ரோபால் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
புறநகர் குறுமையத்துக்கு உட்பட்ட, 30க்கு மேற்பட்ட பள்ளிகளில் இருந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்று, தங்கள் முழுத்திறமையையும் வெளிப்படுத்தினர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை, பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் தீபா, நாகராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.