/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெற்றி ஒன்றே இலக்கு; களத்தில் சீறிய மாணவர்கள் குறுமைய போட்டிகளில் அபாரம்
/
வெற்றி ஒன்றே இலக்கு; களத்தில் சீறிய மாணவர்கள் குறுமைய போட்டிகளில் அபாரம்
வெற்றி ஒன்றே இலக்கு; களத்தில் சீறிய மாணவர்கள் குறுமைய போட்டிகளில் அபாரம்
வெற்றி ஒன்றே இலக்கு; களத்தில் சீறிய மாணவர்கள் குறுமைய போட்டிகளில் அபாரம்
ADDED : ஆக 17, 2024 12:37 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி கிழக்கு, கோட்டூர் குறுமைய அளவிலான விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் திறமை காண்பித்து அசத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி கிழக்கு குறுமைய அளவிலான விளையாட்டு போட்டிகள், மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில் நடக்கிறது.
அதில், நேற்று கால்பந்து, கைபந்து, கோ-கோ உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. அதில், மாணவர்கள் முழு திறமையை வெளிப்படுத்தி விளையாடி வருகின்றனர். போட்டிகளை, சிறுகளந்தை விக்னேஷ்வர் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒருங்கிணைத்து நடத்துகிறது.
பேட்மிட்டன்
ஒற்றையர் மற்றும் இரட்டையர் பேட்மிட்டன் போட்டிகள், 14, 17, 19 வயது பிரிவில் நடைபெற்றன.14வயதுக்கு உட்பட்ட மாணவியர் ஒற்றையர் பிரிவில், பொள்ளாச்சி மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், லட்சுமிநாயக்கன்பாளையம் எஸ்.ஆர்.என்.வி., பள்ளி இரண்டாமிடமும் பெற்றன. இரட்டையர் பிரிவில், பொள்ளாச்சி எல்.எம்.எச்.எஸ்., பள்ளி முதலிடமும், லட்சுமி நாயக்கன்பாளையம் எஸ்.ஆர்.என்.வி., பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.
17 வயதுக்கு உட்பட்ட ஒற்றையர், இரட்டையர் பிரிவில், பொள்ளாச்சி ஏ.எம்.எஸ்., பள்ளி முதலிடம் பெற்றது. ஒற்றையர், இரட்டையர் பிரிவில், பொள்ளாச்சி எல்.எம்.எச்.எஸ்., பள்ளி இரண்டாமிடம் பெற்றது.
19 வயது ஒற்றையர் பிரிவில், பொள்ளாச்சி மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், ஏ.எம்.எஸ்., பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.இரட்டையர் பிரிவில் பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், பொள்ளாச்சி பழனிக்கவுண்டர் மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.
மாணவர் பிரிவு
ஒற்றையர் மற்றும் இரட்டையர் 14வயது பிரிவில், எல்.எம்.எச்.எஸ்., பள்ளி முதலிடம் பெற்றது. ஒற்றையர் பிரிவில் ஏ.எம்.எஸ்., பள்ளி இண்டாமிடமும், இரட்டையர் பிரிவில் லட்சுமிநாயக்கன் பாளையம் எஸ்.ஆர்.என்.வி., பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.
17 வயது ஒற்றையர் பிரிவில், விஸ்வதீப்தி பள்ளி முதலிடமும், எல்.எம்.எஸ்., பள்ளி இரண்டாமிடமும், இரட்டையர் பிரிவில், எல்.எம்.எச்.எஸ்., பள்ளி முதலிடமும், புளியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.
19 வயது ஒற்றையர், இரட்டையர் பிரிவில், விஸ்வதீப்தி பள்ளி முதலிடமும், லட்சுமி நாயக்கன்பாளையம் எஸ்.ஆர்.என்.வி., பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.
கோட்டூர்
கோட்டூர் குறுமைய அளவிலான போட்டிகள், திவான்சாபுதுார் அரசு மேல்நிலைப்பள்ளி நடத்துகிறது. கந்தசாமி மெட்ரிக் பள்ளியில் நடந்த கைப்பந்து போட்டியில், 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் வால்பாறை நேசம் டிரஸ்ட் பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி வென்றது. கந்தசாமி மெட்ரிக் பள்ளி இரண்டாமிடம் பிடித்தது.
17, 19 வயதுக்கு உட்பட்ட மாணவியர் பிரிவில், வால்பாறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியும், 17 வயது மாணவர் பிரிவில்கந்தசாமி மெட்ரிக் பள்ளியும், 19 வயது பிரிவில், கோட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடமும், கந்தசாமி மெட்ரிக் பள்ளி இரண்டாமிடமும் பெற்றன. தொடர்ந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

