/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வளர்ச்சிப்பணிகளுக்கு ஆளும் கட்சி பிரமுகர் முட்டுக்கட்டை நகராட்சி கவுன்சிலர்கள் திடீர் போராட்டம்

ADDED : செப் 02, 2024 02:11 AM

வால்பாறை;வால்பாறை நகராட்சியில், வளர்ச்சிப்பணிகளுக்கு ஆளும் கட்சியை சேர்ந்த பிரமுகர் முட்டுக்கட்டையாக செயல்படுவதாக கூறி, கவுன்சிலர்கள் திடீர் போராட்டத்தில் குதித்தனர்.
வால்பாறை நகராட்சியில், 19 வார்டில் தி.மு.க., கவுன்சிலர்களும், தலா ஒரு வார்டில் அ.தி.மு.க., வி.சி., கவுன்சிலர்களும் உள்ளனர். தலைவராக தி.மு.க.,வைச்சேர்ந்த அழகுசுந்தரவள்ளியும், துணைத்தலைவராக செந்தில்குமாரும் உள்ளனர்.
இந்நிலையில், வால்பாறை நகராட்சியில் வளர்ச்சிப்பணிகளுக்கு தி.மு.க., பிரமுகர் தடையாக இருப்பதாக கூறி, நகராட்சித்தலைவர் அழகுசுந்தரவள்ளி, துணைத்தலைவர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் கவுன்சிலர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கவுன்சிலர்கள் கூறியதாவது: மக்களின் அடிப்படை தேவைகளை கண்டறிந்து, வால்பாறை நகராட்சி சார்பில் வளர்ச்சிப்பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, கடந்த பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட பணிகள் கூட நாங்கள் வந்த பின் செய்துள்ளோம்.
இந்நிலையில், சமீப காலமாக வால்பாறை நகராட்சியில், வளர்ச்சிப்பணிகளுக்காக டெண்டர் விட்டால் ஆளும் கட்சியைச்சேர்ந்த முக்கிய பிரமுகர், மேலிடத்தில் தவறான தகவல்களை தெரிவித்து, மூன்று முறை டெண்டர் விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளார்.
இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். ஆளும் கட்சிக்கு எதிராக செயல்படும் பிரமுகர் மீது, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.