/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷனில் சர்க்கரை, கோதுமை கிடைக்கலை; கார்டுதாரர்கள் புகார்
/
ரேஷனில் சர்க்கரை, கோதுமை கிடைக்கலை; கார்டுதாரர்கள் புகார்
ரேஷனில் சர்க்கரை, கோதுமை கிடைக்கலை; கார்டுதாரர்கள் புகார்
ரேஷனில் சர்க்கரை, கோதுமை கிடைக்கலை; கார்டுதாரர்கள் புகார்
ADDED : மார் 09, 2025 11:40 PM
கோவை; ரேஷன் கடைகளில் கோதுமை சர்க்கரை கிடைக்கவில்லை என, கார்டுதாரர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில், 11.48 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள், மானிய விலையில் வழங்கப்பட்டு வழங்கப்படுகின்றன. இதில் அரிசி, பச்சரிசி, கோதுமை ஆகிய மூன்றும், மத்திய அரசு மானியத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த மாதத்துக்கான கோதுமை மற்றும் சர்க்கரை வழங்கப்படவில்லை என, கார்டுதாரர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ரேஷன் கடை ஊழியர்கள் கூறுகையில், 'இந்த மாதம் வழங்க தேவையான கோதுமை, சர்க்கரை ஸ்டாக் இல்லை. இந்த மாத இறுதிக்குள் சப்ளை வந்தால், கொடுத்து விடுவோம்' என்றனர்.
இது குறித்து, கோவை மாவட்ட கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் ராஜேந்திரன் கூறியதாவது:
ஏற்கனவே வழங்கப்படும் கோதுமை அளவு போதவில்லை. இந்நிலையில், மேலும் அலாட்மென்ட் அளவை குறைத்துள்ளனர். அதனால் கார்டுதாரர்களுக்கு கொடுக்கும் அளவுக்கு, கோதுமை ஸ்டாக் இல்லை. சர்க்கரையும் குடோனில் ஸ்டாக் இல்லை.
பொங்கல் தொகுப்புக்காக வாங்கிய சர்க்கரை, 1.65 லட்சம் கிலோ அந்தந்த கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
அந்த சர்க்கரையை, கார்டுதாரர்களுக்கு வழங்க சொல்லி உத்தரவிட்டு இருக்கிறோம். இன்னும் இரண்டு நாட்களில், வழக்கமாக வழங்கும் சர்க்கரை வந்து விடும். அதன் பிறகு பிரச்னை இருக்காது,'' என்றார்.