/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எந்த பிரச்னைக்கும் தற்கொலை தீர்வல்ல...! இந்தாண்டு மட்டும் 430 பேர் விபரீதம்
/
எந்த பிரச்னைக்கும் தற்கொலை தீர்வல்ல...! இந்தாண்டு மட்டும் 430 பேர் விபரீதம்
எந்த பிரச்னைக்கும் தற்கொலை தீர்வல்ல...! இந்தாண்டு மட்டும் 430 பேர் விபரீதம்
எந்த பிரச்னைக்கும் தற்கொலை தீர்வல்ல...! இந்தாண்டு மட்டும் 430 பேர் விபரீதம்
ADDED : டிச 06, 2024 11:38 PM

கோவை; கோவை மாநகரில் இந்தாண்டு அக்., வரை, 430 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எந்த ஒரு பிரச்னைக்கும் தற்கொலை தீர்வல்ல என்கிறார் பிரபல மனநல மருத்துவர் மோனி.
தற்கொலை மனிதத்திற்கும், சட்டத்திற்கும் எதிரானது. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பகுதியில் தற்கொலை நடந்தால், அது அப்பகுதியில் பெரிய செய்தியாக இருக்கும்.
கடன் தொல்லை, குடும்ப பிரச்னை, உடல் நலம் பாதிப்பு என பல்வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்தனர். அதன் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது. எந்த பிரச்னை வந்தாலும், நின்று சமாளிக்க வேண்டும் என பெற்றோர் கற்றுக்கொடுத்தனர். மன தைரியம் அதிகம் இருந்தது.
ஆனால், தற்போது, சிறு சிறு பிரச்னைகளை சந்திக்க முடியாமல் பலர் உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். தினசரி இரண்டு, மூன்று பேர் தற்கொலை செய்து கொள்வதை பார்ப்பது வருத்தமளிக்கிறது. அதிலும், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள் விபரீத முடிவு எடுப்பது கொடுமையானது.
சமீபத்தில் போத்தனுார், வெள்ளலுார் பகுதியை சேர்ந்த டிப்ளமோ முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் போனில் அதிக நேரம் பேசிக்கொண்டிருந்ததற்காக, அவரின் தந்தை கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த அச்சிறுவன், படுக்கை அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதேபோல், சிங்காநல்லுார் பகுதியில் தேர்வுக்கு படிக்காமல், டிவி பார்த்துக்கொண்டிருந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி, தாய் திட்டியதற்காக துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது போன்று, சிறு சிறு காரணங்களுக்காக பல சிறுவர்கள், இளைஞர்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்கின்றனர்.
கடந்த, 2023ம் ஆண்டில் மொத்தம், 432 பேர் தற்கொலை தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதில் 305 ஆண்கள், 95 பெண்கள், 16 சிறுவர்கள், 16 சிறுமியர். இந்தாண்டு ஜன., 1ம் தேதி முதல் அக்., 31ம் தேதி வரை மட்டும் 430 பேர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டனர்.
அதில் 306 ஆண்கள், 96 பெண்கள், 18 சிறுவர்கள், 9 சிறுமியர் மற்றும் ஒரு திருநங்கை. இரண்டு ஆண்டுகளில் மட்டும் 862 பேர் தற்கொலை மூலமாக, தங்களின் வாழ்வை முடித்துக்கொண்டுள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், இந்தாண்டு தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.