/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோடை மழை பெய்வதால் சோளம் விதைப்பு துவக்கம்
/
கோடை மழை பெய்வதால் சோளம் விதைப்பு துவக்கம்
ADDED : மே 19, 2024 11:06 PM

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, வடசித்தூரில் விவசாயிகள் சோளம் விதைப்பு பணியை துவங்கியுள்ளனர்.
கோடை மழை பெய்வதால், கிணத்துக்கடவு, வடசித்தூரில் உள்ள விவசாயிகள் சோளம் விதைக்க துவங்கியுள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது:
கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்கிறது. இதை தொடர்ந்து, கோடை உழவு செய்து, சோளம் விதைக்க திட்டமிட்டுள்ளோம்.
ஒரு ஏக்கருக்கு, 15 கிலோ சோளம் விதை தேவைப்படுகிறது. இதற்கு, 3 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஆகும்.
மானாவாரியில் சோளம் விதைப்பது, கால்நடை தீவனத்துக்கு கைகொடுக்கும். சோளம் சாகுபடியில் பெரிய அளவில் பராமரிப்பு செலவு இருக்காது. மழை பெய்தால் செழிப்பாக வளரும்.
அறுவடை செய்யும் சோளத்தில் உணவு தேவைக்கு போக, மிதமுள்ளதை விதைப்புக்கு பயன்படுத்துவோம். சோளத்தட்டு கால்நடைகளுக்கு தீவனமாக கிடைக்கும். அடுத்த போகத்தில், தட்டை மற்றும் கொள்ளு பயிரிடுவோம்.
இவ்வாறு, கூறினர்.

