/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துவங்கியது கோடை சீசன்: பழச்சாறு விலை தாறுமாறு
/
துவங்கியது கோடை சீசன்: பழச்சாறு விலை தாறுமாறு
ADDED : மார் 14, 2025 10:39 PM
பொள்ளாச்சி; சூட்டை தணிக்கும் பழச்சாறு விற்பனை அதிகரிப்பதால், கடைகளுக்கு ஏற்ப அவைகளின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது.
பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதியில், கடந்த சில வாரங்களாக, பகலில் கடும் வெயில் நிலவி வருகிறது. கோடை துவங்க உள்ளதால், ஆங்காங்கே உள்ள பழக்கடைகளில் ஜூஸ் விற்பனை சூடுபிடித்துள்ளது.
ரோட்டோரம் விற்கப்படும் இளநீர், மோர், பதநீர் மற்றும் பழச்சாறுகளை, பலரும் தேடிச் சென்று பருகுகின்றனர். அதேநேரம், பழச்சாறுகளின் விலை, வழக்கத்துக்கு மாறாக, ஐந்து ரூபாய் முதல், 10 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
பழச்சாறு கடைகளில், ஒரு கப் மாதுளை ஜூஸ், 70 முதல் 100 ரூபாய்; சாத்துக்குடி, 50 முதல் 60; ஆப்பிள் ஜூஸ், 60 முதல் 80 ரூபாய்; முலாம்பழ ஜூஸ், 40 முதல் 50 வரை விற்கப்படுகிறது. கடைகளுக்கு ஏற்ப விலையும் மாறுபடுவதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.